×

நீதிமன்றங்களை மக்கள் பயமின்றி அணுக வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

புது டெல்லி: டெல்லியில் நடந்த இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசுகையில், ‘கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி தங்களுக்குரிய நீதியை பெற்றுள்ளனர். சொத்து பாதுகாப்பு, சட்ட விரோத கைதுக்கு எதிராக பாதுகாப்பு, கொத்தடிமை மீட்பு, பழங்குடி மக்கள் வாழ்விட பாதுகாப்பு, மனிதர்கள் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய தடை என்று மக்களுக்கான நீதி அளிக்கப்பட்டுள்ளது.

தங்களது இறுதி புகலிடமாக நீதிமன்றத்தை கருதும் பொதுமக்கள் தங்களுக்கான நீதியை பெற முன்வர வேண்டும். நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்று முதல் சிறைக்கைதிகள் விடுதலை குறித்த ஆணை டிஜிட்டல் முறையில் சிறை க்கு அனுப்பும் திட்டம் அறிமுகமாகி உள்ளது’. இவ்வாறு அவர் பேசினார்.

The post நீதிமன்றங்களை மக்கள் பயமின்றி அணுக வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,New Delhi ,Indian Constitution Day ,Delhi ,T.Y. Chandrachud ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...